பெங்களூரு: மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியின் முதல்வர் குமாரசாமி, பா.ஜ. எம்.எல்.ஏ.க்களை இழுக்க குதிரை பேரம் செய்வதாக பாஜக தெரிவித்துள்ளது.
கர்நாடகாவில் காங்,- மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி ஆட்சி தற்போது நடக்கிறது. தேர்தலுக்குப் பிந்தைய கூட்டணியாக இது அமைந்தது. அதிக இடங்களைப் பெற்றும் பாஜகவால் மெஜாரிட்டிக்குத் தேவையான 112 எம்எல்ஏக்கள் இல்லாத காரணத்தால் மெஜாரிட்டி நிருபிக்க இயலாமல் ஆட்சியை விட்டு இறங்கியது. பிரதான எதிர்கட்சியான பா.ஜ.வுக்கு 104 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். தற்போது மொத்தமுள்ள 224 இடங்களில் இக்கூட்டணிக்கு 118 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். காங்கிரசிடம் 80 எம்.எல்.ஏ.க்களும் மதச்சார்பற்ற ஜனதா தளத்திடம் 37 எம்.எல்.ஏ.க்கள் கூட்டணி கட்சியான பிஎஸ்பியிடம் ஒரு எம்.எல்.ஏவும் உள்ளது.
காங்கிரசின் 5 சட்டசபை உறுப்பினர்களை பாஜக கடத்திவைத்துள்ளதாக நேற்று காங்கிரஸ் அமைச்சர் சிவகுமார் புகார் கூறிய நிலையில், இன்று பா.ஜ. எம்.எல்.ஏ.க்கள் 104 பேரும் அரியானாவின் கூர்கானுக்கு கடத்திச் செல்லப்பட்டதாகவும், பாஜக சட்டசபை உறுப்பினர்களை குதிரை பேரம் செய்ய முயற்சிக்கிறார்கள் என்பதால் விடுதியில் தங்க வைக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வருகின்றன. இதனால் கர்நாடகா அரசியலில் திடீர் திருப்பமும் பரபரப்பும் ஏற்பட்டுள்ளது.