தன்மீது அதிக அக்கறை கொண்ட அஜித்- நடிகர் அருண்விஜய் புகழாரம்
அஜித் நடிப்பில் உருவான ‘என்னை அறிந்தால்’ படத்தில் அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. இடையில் சில படங்கள் ஓடாமலும் பட வாய்ப்புகளதிகம் இல்லாமலும் இருந்த அவருக்கு அஜித்துடன் இணைந்த படத்தின் மூலம் மீண்டும் ஒரு எண்ட்ரி தமிழ் சினிமாவில் கிடைத்தது.
இதன் பிறகு அவர் நடித்த ‘குற்றம் 23’ படம் வெற்றி பெற்றது. தற்போது அவர் ஹீரோவாக நடித்து வரும் ‘தடம்’ படம் ரீலீஸாக காத்துக் கொண்டிருக்கிறது.
தடம் படவிழாவில் நடிகர் அருண் விஜய்யிடம், அஜித் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு, “நாங்கள் இருவரும் அண்மையில் நேரில் சந்தித்துப் பேசியதில்லை. ஆனால் அவரின் மேனேஜரிடம் என்னைப் பற்றி அடிக்கடி கேட்டு தெரிந்து கொள்கிறார். அவரது மானேஜர் அடிக்கடி என்னைத் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பார். என் மீது அதிக அக்கறைகொண்ட மனிதர் அஜித் அவர்கள். அவருக்கும், எனக்கும் உள்ள உறவு மகிழ்ச்சியாக உள்ளது. அவர் சொன்ன வார்த்தைகள் இன்னும் எனக்கு ஞாபகமாக உள்ளது. அதன் படி தான் நான் நடக்கிறேன்.” என கூறியுள்ளார்.