வரும் மக்களவைத் தேர்தலில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் எடப்பாடி தொகுதி சேலம் தொகுதிக்குள் தான் வருகிறது. ஆகையால் இங்கு அதிமுக வெல்லுமா என்ற கேள்வி எழும்பியுள்ளது.
சேலம் மக்களவைத் தொகுதியைப் பொறுத்தவரை அதிமுக சார்பில் சரவணன் என்பவரும், திமுக சார்பில் எஸ்.ஆர்.பார்த்திபன் என்பவரும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அமமுக சார்பில் செல்வம் என்பவர் களம் இறங்கி உள்ளார்.
ஓமலூர், எடப்பாடி, சேலம் (மேற்கு), சேலம் (வடக்கு), சேலம் (தெற்கு), வீரபாண்டி ஆகிய ஆறு சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கியது சேலம் மக்களவைத் தொகுதி. இயல்பாகவே அதிமுக, பாமக, தேமுதிக வலுவான வாக்கு வங்கியைக் கொண்ட தொகுதி. திமுகவைச் சார்ந்த வீரபாண்டி ஆறுமுகத்தின் மறைவுக்குப் பின்னர் அதிமுகவின் வலுவான தொகுதிகளில் சேலமும் வந்து சேர்ந்தது.
சேலத்தில் வெள்ளாள கவுண்டர்கள், வன்னியர்கள் வசித்து வருகின்றனர். சிறுபான்மை வாக்குகள் பெருமளவு இல்லை.
தேர்தலில் எந்த அணி வெற்றி பெரும் வாய்ப்பைக் கொண்டுள்ளது என்பதற்கான எனது தரப்பு விஷயங்களை இந்த லிங்கில் சென்று படிக்கலாம்.
2016 சட்டசபை தேர்தலில் அதிமுக அணி பெற்ற வாக்குகள் 6,78,000
2016 சட்டசபை தேர்தலில் திமுக அணி பெற்ற வாக்குகள் 4,11,000
அதிமுக அணியின் வெற்றி வாக்கு வித்தியாசம் 2,67,000 !!!
அதிமுக திட்டவட்டமாக வெற்றி பெரும் தொகுதிகளில் சேலமும் உள்ளடக்கம். சேலத்தில் அதிமுக வெற்றி பெறும் என்பதே எனது கணிப்பு. தேர்தல் முடிவில் பார்க்கலாம்.