வைரலாகி வரும் வீர மரணம் அடைந்த மேஜர் மனைவியின் காதல் கவிதை; என்னை விட நாட்டை அதிகம் காதலித்தாய்…
புல்வாமா தாக்குதலில் வீர மரணம் அடைந்த தனது கணவரும், ராணுவ ஜெனரல் மேஜருமான விபுதி சங்கர் தவுன்டியாலுக்கு , அவரின் அன்பு மனைவி நிகிதா கவுள் எழுதிய கவிதை வரிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நிகிதா கவுலுக்கும், மேஜர் விபுதி சங்கர் தவுன்டியாலுக்கும் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம்தான் திருமணம் நடைபெற்றது. விரைவில் முதலாமாண்டுத் திருமண விழாவைக் கொண்டாட இருவரும் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில்தான் அவர் வீர மரணம் அடைந்துள்ளார்.
அவர் எழுதிய கவிதை இதுதான்.
என்னிடம் பொய்யுரைத்துவிட்டாய்
‘நிகிதா உன்னைக் காதலிக்கிறேன்’ என..
சொல்லப்போனால் என்னைவிட
நீ அதிகம் காதலித்தது நாட்டைத்தான்…
எனக்கு பொறாமையாகத்தான் இருக்கிறது
ஆனால் ஒன்றும் செய்யமுடியவில்லை..
மக்களுக்காகவே உன் வாழ்க்கையை
தியாகம் செய்துவிட்டாய்..!
உறுதியான இதயம் கொண்டவன் நீ..
உன்னை என் கணவனாக பெற்றதில்
பெருமை எனக்கு..
நீ என்னை விட்டுச் சென்றது
அத்தனை வலிக்கிறது..
ஆனால் எனக்குத் தெரியும்
இறுதி வரை என்னுடன்தான் இருப்பாய்..
என் கடைசி மூச்சு வரை
உன்னை காதலித்துக்கொண்டே இருப்பேன்..
ஐ லவ் யூ விபு!